அறிவித்தல்

2019 ம் ஆண்டிற்கான நிதிப் பங்களிப்பு

அன்புடையீர்!

தமிழ்க் கத்தோலிக்கர்களின் ஒருமித்த செயற்பாடுகளும் நடைமுறைகளும் எமது ஆன்மீக செயற்பாடுகளுக்கு இன்றியமையாதது என்பதை நீங்கள் அனைவரும் நன்கறிவீர்கள். அந்த வகையில் எமது செயற்பாடுகளுக்கு செயலுரு கொடுக்க, நீங்கள் வழங்கும் நிதிப் பங்களிப்பிற்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

2019 ம் ஆண்டிற்கான நிதிப் பங்களிப்பான 500 kr களை இதுவரையில் செலுத்திய அன்புள்ளங்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவிப்பதோடு, இது வரையில் நிதிப் பங்களிப்பைச் செய்ய மறந்தவர்களுக்கான ஒர் நினைவூட்டலாக மேற்கண்ட தகவலை அறியத்தருகிறோம்.

இதுவரையில் நிதிப்பங்களிப்பைச் செய்யாதவர்கள், 500 kr பங்களிப்பை எமது நிர்வாகப் பொருளாளர் மோசஸ் அவர்களிடம் நேரடியாகவோ, அன்றேல் எமது வங்கி இல: 0539.53.90998 இல் வைப்பிலிட்டு ஆன்மீகசபையின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்குமாறு அன்போடு கேட்டு நிற்கிறோம்.

இங்கனம்,
ஆன்மீகசபை நிர்வாகம் 2019.