Mariaholm மரியன்னையின் திருவிழா பற்றிய செயற்பாட்டுக் குழுவினரின் அறிவித்தல்.
கொரோனா தொற்றுநோய் காரணத்தால் இவ்வருடம் மரியன்னையின் புனித யாத்திரை, இரண்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவாக மட்டுப்படுத்தப்பட்டளவில் இடம் பெறும் என்பதை வருத்தத்துடன் அறியத்தருகிறோம்.
நோர்வே சுகாதார அமைப்பு விடுத்துள்ள அறிவுறுத்தலுக்கு அமையவே விழாச் செயற்பாடுகள் அனைத்தும் முன்னெடுக்கப்படும்.
அந்த வகையில் அதிக பட்சமாக 200 பேர் மட்டுமே திருவிழா நிகழ்வில் கலந்து கொள்ள முடியும். அத்தோடு இவ்வருடம் மரியன்னையின் திருத்தலத்தில் தங்கியிருப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
திருவிழா வழிபாடுகள் இரண்டு நாட்கள் மட்டும் இடம் பெறும்.
01.08.2020 சனி மாலை 16: 30 மணிக்கு கொடியேற்றத்துடன் திருச்செபமாலையும், திருப்பலியும், நற்கருணை ஆராதனையும் இடம் பெறும்.
திருவிழாத் திருப்பலி 02.08.2020 ஞாயிறு முற்பகல் 11:30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பித்து திருநாள் திருப்பலியுடன் கொடியிறக்க பிரியாவிடை செபத்துடன் அன்னை மரியின் சொரூப ஆசீர்வாதமும் இடம்பெறும்.
இரண்டு நாள் திருவிழா வழிபாடுகளில் பங்குபற்றுவதற்கான பதிவுகளை எமது இணைத்தளமான www.nortamilkat.no இல், TKSOAஇல் இன்று மாலை 8:00 மணி முதல் மேற்கொள்ளலாம். பதிவு செய்யும் போது எமது இணையதளத்தில் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைக் கவனத்திற் கொண்டு பதிவுகளை மேற்கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறோம்.
உங்கள் கவனத்திற்கு !!!
திருநாள் திருப்பலியைத் தொடர்ந்து இவ்வருடம் மதிய உணவு பரிமாறப்படாது என்பதை அறியத்தருகிறோம். தற்போதய அசாதாரண சூழலை கவனத்திற் கொண்டு நீங்கள் கொண்டு வரும் உணவுகளைக் கூட பகிர்ந்து கொள்ளாது கொரோனாவில் இருந்து எம்மை நாமே பாதுகாப்பதோடு ஏனையவரையும் பாதுகாப்போம்.
வழிபாடுகள் நிறைவடைந்ததும் இரண்டு நாட்களும் தேனீர் மட்டும் பரிமாறப்படும்.
அன்னை மரியின் விழா சிறப்புற உங்கள் அனைவரினதும் ஒத்தாசையை வேண்டி நிற்கிறோம்.
இங்ஙனம்,
Mariaholm மரியன்னை செயற்பாட்டுக் குழுவினர்
மேலதிக விபரங்களுக்கு:- www.nortamilkat.no
Facebook:- TKSOA
தொடர்புகள் :
அன்ரன் அமரபாலா 91113645
மகேந்திரன் மரியாம்பிள்ளை 94347292