அறிவித்தல்வழிபாடுகள்

விசேட புதுவருடத் திருப்பலி

இறையேசுவில் நம்பிக்கையும் விசுவாசமும் கொண்ட பங்குமக்களே!

உங்களில் சிலரின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க எதிர்வரும் 31ம் திகதி பின்னிரவு 23.30 ற்கு விசேட புதுவருடத் திருப்பலி St. Johannes தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி திருப்பலியில் 20 அடியாளர்கள் மட்டும் கலந்துகொள்ள முடியும் என்பது அறிந்ததே. உங்கள் வரவை உறுதிசெய்ய ஆன்மீகசபைத் தலைவர் அமரபாலா தொலைபேசி எண்: 91113645 என்ற இலக்கத்துடன், எதிர்வரும் செவ்வாய் 29.12.2020 பிற்பகல் 20:00 மணிக்கு முன்பாக தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறோம். சற்றுப் பிந்திக் கிடைத்த தகவலாதலால் 20 பக்கத்தர்கள் பதிவு செய்தால் மட்டுமே புதுவருடத் திருப்பலி இடம்பெறும் என்பதை முற்கூட்டியே அறியத்தருகிறோம்.

மேலும், நாம் ஏற்கனவே அறியத்தந்தது போல் 31.12.2020 பிற்பகல் 19:30 மணிக்கு St. Johannes தேவாலயத்தில் நன்றித் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும் என்பதை நினைவூட்ட விரும்புறோம், அதேவேளை ஏனைய திருப்பலிகள் திட்டமிட்டபடி ஒப்புக்கொடுக்கப்படும்.

மேற்படி அனைத்துத் திருப்பலிகளையும் எமக்காக நிறைவேற்றித் தரும் அருட்தந்தை ஜெகத் மற்றும் அருட்தந்தை பிராங்கிலின் ஆகியோரின் ஆன்மீகப் பணிக்கு பங்குமக்கள் சார்பில் நன்றி கூறுவதோடு அவர்களின் உன்னத்பணி சிறக்க இறைவனை வேண்டுவோம்.

மேலும் வேதாகம அருள்வாக்கு நாட்பதிவுகளின் மிகச் சில பிரதிகள் மட்டும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன, இப்பிரதியை பெற்றுக்கொள்ள ஆன்மீகசபை வழிபாட்டுக்குழுப் பொறுப்பாளர் திருமதி Thananchiga Dickmal தொலைபேசி எண் 46385751 உடன் தொடர்பு கொள்ளவும். உங்களுக்குத் தேவையான பிரதிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் பெயர்களைப் பதிவு செய்யின் வேதாகம அருள்வாக்கு நாட்பதிவுப் பிரதிகள் விரைவாக உங்களிடம் கிடைக்க ஆவன செய்யப்படும்.

நிறைவாக 2020 ம் ஆண்டிற்க்கான நிதிப் பங்களிப்பு 500 kr. செலுத்திய உங்கள் அனைவருக்கும் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகசபை சார்பில் எமது நன்றிகள். இதுவரையில் பங்களிப்பு நிதியை செலுத்த மறந்தவர்கள் எமது வங்கி இலக்கம் A/C 05395390998 அல்லது Vips 28807 இலக்கத்திற்கு 500 Kr. வைப்பிலிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம். மேலும் நீங்கள் பங்களிப்பை செலுத்தியதை உறுதிசெய்ய எமது பொருளாளர் மோசஸ் தொலைபேசி எண் : 46468907 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

நன்றி –
தமிழ்க் கத்தோலிக்க
ஆன்மீகசபை
ஒஸ்லோ – வீக்கன் நிர்வாகம்
© 2020