அறிவித்தல்

தேர்தல் அறிவிப்பு

எமது அன்புக்குரிய பங்கு மக்களே!
நாம் கடந்த வருட இறுதியில் அறியத்தந்தது போல் எதிர்வரும் ஏப்பிரல் மாதத்தில் ஆன்மீகசபை நிருவாக உறுப்பினர்களுக்கான தேர்தல் இடம் பெறவுள்ளது என்பதை அறியத்தருகிறோம்.
தற்போது உள்ள சூழலில் தேர்தலை இணையத்தில் செய்வதே ஒரே  தெரிவாக இருக்கும்  என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்தவகையில் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 18ம் திகதி முதல் 25ம் திகதி வரையான ஒரு வாரம் இணைய வாக்களிப்பிற்கான காலமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
மேற்படி தேர்தலை இணையத்தில் நடாத்துவதற்கு சாதகமான சமிஞ்சையை ஆன்மீக வழிகாட்டி எமக்கு காட்டியுள்ளார். அவ்வாறே கடந்த வருடம் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அனைவராலும் தெரிவுசெய்யப்பட்ட தேர்தல் குழுவினருக்கு தேர்தல் பணிகளை முன்னெடுக்கத் தேவையான பூர்வாங்க ஏற்பாடுகளைச் செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தலில் வாக்களிக்கவும், வேட்பாளர்களாகக் களமிறங்கவும் இரண்டு விடயங்கள் மிக அத்தியாவசியமானது  என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். முதலாவதாக கத்தோலிக்கரான ஒருவர் உறுதிப்பூசுதல் என்னும் தேவருட்சாதனத்தைப் பெற்றிருந்தால் மட்டுமே வாக்களிக்கவோ அல்லது வேட்பாளராகவோ இருக்கத் தகுதி பெறுவர் என்பதை ஆன்மீக வழிகாட்டி எமக்கு  தெளிவுபடுத்தியுள்ளார். இரண்டாவதாக எமது யாப்பில் குறிப்பிட்டது போல் கடந்த 2020 ல் நிதிப் பங்களிப்பைச் செய்த16 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்கும் உரித்துடையவர்கள். மேலும் அதே தகைமைகள் கொண்ட  18 வயதுக்கு மேற்பட்டோர் வேட்பாளராகும் தகுதியைப் பெறுவர். எனவே தயவு செய்து 2020 ஆண்டிற்கான குடும்பத்திற்கு குரோனர் 500/- நிதிப் பங்களிப்பை செய்யுமாறு அன்போடு வேண்டுகிறோம்.
கொரோன வைரசின் கட்டுக்கடங்கா தொற்றால் கடந்த வருடம் எமது ஆலயத்தின் செயற்பாடுகள் நிறைவாக இடம்பெறாததால் பலர் வருடாந்த  நிதிப்பங்களிப்பைச் செய்யத் தவறியிருக்கக் கூடும். நிதிப்பங்களிப்பைச் செய்யத் தவறியவர்கள் எமது பொருளாளர் திரு.மோசேஸ் அவர்களுடன் 46468907 என்ற இலக்கத்தோடு தொடர்பு கொண்டு அல்லது எமது VIPPS இல : 28807 அல்லது வங்கி இல:  0539 53 90998, மூலமாக 500 குரோனர் நிதிப் பங்களிப்பை விரைவாகச் செய்யுமாறு பரிந்துரைக்கிறோம்.
நான்கு உறுப்பினர்களை  ஆன்மீகசபை நிருவாகத் தேர்தலில் தேர்ந்தெடுக்கவுள்ளதால், இறைவிசுவாசத்துடன் நிருவாகப் பணிகளைச் செய்யும் ஆற்றல் உள்ளவர்களை இனம் கண்டு அவர்களை நீங்கள் பரிந்துரை செய்யும் வகையில் தேர்தல் குழுவினர் எமது Viber மூலமாக  அல்லது எமது அலுவலக இணையத்தளத்தில்  தகவல்களை பகிர்ந்து கொள்ளும்  வேளையில் தயங்காது உரியவர்களை அடையாளப்படுத்துமாறு உரிமையுடன் வேண்டுகிறோம்.
முதற் தடவையாக இணையத்தில் இடம்பெறவுள்ள இத்தேர்தலை திறம்பட நடாத்திட தேர்தல் குழுவினருக்கு ஒத்தாசை புரியுமாறு வினயமாக வேண்டி நிற்கிறோம். தேர்தல் சார்ந்த மேலதிக விபரங்களை தேர்தல் குழுவினர் விரைவில் அறியத்தருவர் என நம்புகிறோம்.
இந்த இடர்காலத்தில் நாம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் ஆசீர்வதித்து வழிநடத்திட எல்லாம் வல்ல இறைவனை எமது செபங்களில் வேண்டிடுவோம்.

நன்றி –
தமிழ்க் கத்தோலிக்கஆன்மீகசபை
ஒஸ்லோ – வீக்கன்
நிருவாகம்© 2021