அறிவித்தல்

ஆன்மீகசபை நிர்வாக உறுப்பினர் தேர்தல் 18-25.04.2021

எமது அன்பான உறவுகளே! 

 எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 18ம் திகதி முதல் 25ம் திகதி வரையில் இடம்பெறவுள்ள தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகசபைக்கான தேர்தலில் தோற்றவுள்ள வேட்பாளர்கள் அனைவருடனான  நேர்காணல்கள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன என்ற மகிழ்வான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

யாப்பு விதிகளுக்கு அமைய மிக விரைவில் வேட்பாளர்களின் விபரங்கள் நிழற்படத்தோடு தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகசபை இணையத்தளத்தில் தரவேற்றம் செய்யப்படும், எனவே நீங்கள் விரும்பும் வேட்பாளர்கள் நால்வரைத் தெரிவு செய்ய போதுமான கால அவகாசம் வழங்கப்படும் என்பதை உறுதிப்படுத்துகிறோம்.

தேர்தலில் வாக்களிக்க நான்கு முக்கிய விடயங்களை கவனத்திற் கொள்ளவும் அவையாவன:

  1. 2020ம் ஆண்டிற்கான தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகசபை உறுப்பினர் நிதிப்பங்களிப்பைச் செலுத்தியிருந்தல் வேண்டும்.
  2. நிதிப்பங்களிப்பைச் செலுத்தியிருந்தாலும் உறுதிப்பூசுதல் எனும் தேவதிரவிய அனுமானத்தைப் பெற்றவர் மட்டுமே வாக்களிக்கலாம்.
  3. மேற்கூறியவற்றோடு 16 வயதிற்கு மேற்பட்ட ஆன்மீகசபை உறுப்பினர் வாக்களிக்க உரிமையுள்ளவராகக் கருதப்படுவர்.
  4. இவற்றோடு எம்மால் அனுப்பப்பட்ட  விண்ணப்பப் படிவத்தை நிரப்பி அனுப்புவர்களுக்கு மட்டுமே வாக்களிப்பதற்கான இணைப்பு (Iink) மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

இதுவரையில் கணிசமானோர்  படிவத்தை பூர்த்தி செய்து தமது விபரங்களை எமக்கு  அனுப்பியுள்ளனர்.
உங்கள் விபரங்களைப் பதிவு செய்ய:  
https://forms.gle/qaMizScz9FhcvfmdA

உங்கள் தகவல்கள் ஆன்மீகசபை பொருளாளரால் உறுதிப்படுத்தப் பின்னர் வாக்களிக்கும் பணிகள் முடுக்கிவிடப்படும். மிக விரைவில் நீங்கள் அனுப்பிய தகவல்கள் சரியாக எம்மால் பதியப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும். அதன் பின்னர் உங்களுக்கான வாக்களிப்பதற்கான இணைப்பு (Iink) மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

மேற்படி தகவல்கள் சார்ந்த சந்தேகங்கள் இருப்பின் எம்மோடு தொடர்பு கொள்ளவும். எமது மின்னஞ்சல் முகவரி : valg@nortamilkat.no  அல்லது

திரேசம்மா (மரியா) :909 37 933

யூட் : 465 45 192

நிரஞ்சன் : 918 27 121

ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

தேர்தல் பணிகள் அனைத்தும் ஆன்மீக வழிகாட்டியின் அறிவுறுத்தல்களுக்கும் யாப்பு விதிகளுக்கும்  இசைவாக முன்னெடுக்கப்படுகிறது என்பதையும் அறியத்தருகிறோம்.

-நன்றி –
தேர்தல் பணிக்குழு 2021