அறிவித்தல்

தேர்தல் முடிவுகள் 2021

எமது அன்பான பங்குகளே  !

ஒஸ்லோ – வீக்கன் ஆன்மீகசபை நிருவாக உறுப்பினர் தேர்தல் நாம் திட்டமிட்டபடி மிகவும் சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள நீங்கள் மிகுந்த ஆர்வமாக இருப்பீர்கள் என்பதை நாமறிவோம். வழமை போன்று தேர்தல் முடிவுகள் ஆன்மீகசபையின் பொதுக் கூட்டத்தில் வெளிப்படுத்தப்படும் என்ற தகவலை உங்களுக்கு அறியத்தருகிறோம். நிருவாகப் பொதுக் கூட்டம் நடைபெறும் நாளில் தேர்தல் பணிக் குழுவினராகிய நாம்  தேர்தல் தொடர்பான  முழுமையான அறிக்கையை உங்கள்  முன் சமர்ப்பிப்பதோடு தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர் நால்வரின்  பெயர்களையும் அறியத்தருவோம்.

தேர்தலில் பங்குபற்றி ஆர்வத்தோடு வாக்களித்த உங்கள் அனைவருக்கும்  எமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதோடு, தேர்தல் முடிவுகள் 100 விழுக்காடு இரகசியம் பேணப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஆன்மீகசபை வழிகாட்டி தவிர்ந்த வேறு எவரும் ஆண்டுப் பொதுக் கூட்டதின் முன்னர் முடிவுகளை அறிந்து கொள்ள முடியாது என்பதையும் உறுதியாகத் தெரிவிக்கிறோம்.

நிறைவாக தற்போதுள்ள ஒஸ்லோ – வீக்கன் ஆன்மீகசபை நிருவாகத்தினர் விரைவாக பொதுக் கூட்டத்தை கூட்டுவார்கள் எனவும் நம்புகிறோம். முதற் தடவையாக இணையத்தில் நடைபெற்ற தேர்தலில் நம்பிக்கையோடு ஒத்துழைப்பை நல்கிய  உங்கள் ஒவ்வொருவருக்கும் எமது சிறப்பான நன்றிகள் உரித்தாகட்டும்.

இறைவனின் நல்லாசி உங்கள் மீது இருப்பதாக.

நன்றி –

தேர்தல் பணிக்குழு 2021 

Kjære vår medlemmer!

Tamilsk Katolske Sjelesorg Oslo-Viken administrasjon valg 2021 har gått veldig fint som vi har planlagt.
Vi vet at dere er veldig spent på valg resultatet, som vanlig resultatet blir presentert på kommende årsmøte. Valg komité vil presentere rapporten om valget og navnene på de fire kandidatene som dere har valgt.

Her ved takker vi til alle dere som stemte på valget, valgresultatet holdes 100 prosent konfidensielt inntil årsmøte.

Takk.
Valg komité 2021