அறிவித்தல்

மரியாஹொல்ம் திருயாத்திரை

மரியாஹொல்ம் அன்னையின் திருத்தலத்தில் இவ் வருடம் 29.07.2021 முதல் 01.08.2021 வரையில் அன்னைமரியின் திருநாள் இடம்பெறவுள்ளது என்ற தகவலை மனமகிழ்வோடு அறியத்தருகிறோம்.

எமது பேரன்புமிக்க பங்கு மக்களே !

கடந்த வருடம் கொரோனாத் தொற்றுநோய் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டளவில் மட்டுமே திருவிழா நிகழ்ந்தேறியதை நீங்கள் அறிவீர்கள்.

இவ்வருடம் அன்னையின் திருத்தலத்தில் இறைவனின் அனுக்கிரகத்தோடு அன்னையின் திருவிழாவை பெருவிழாகக் கொண்டாடும் சந்தர்ப்பம் அமையக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக அறிகுறிகள் தென்படுகின்றன. எனவே அன்னையின் திருவிழாவிற்கான செயற்குழுவையும், அக்குழுவிற்கான இணைப்பாளர் உட்பட பொறுப்புக்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது.

அன்னையின் திருவிழாவை நேர்த்தியாகத் திட்டமிட்டு விழாவை சிறப்பிக்கும் முகமாக ZOOM இணையம் ஊடான ஒரு சந்திப்பை எதிர்வரும் ஞாயிறு 16. 05.2021 பிற்பகல் 18.00 மணிக்கு நடாத்தலாம் எனத் திட்டமிட்டுள்ளோம். அன்னையின் விழாப்பணிகளை உளவிருப்போடும், ஆர்வத்தோடும் பலர் மனமுவந்து தம்மை முழுமையாக ஈடுபடுத்துவதை நாம் நன்கறிவோம். அந்தவகையில் மேற்படி சந்திப்பில் அனைவரும் கலந்து உங்கள் கருத்துக்களையும், விருப்பங்களையும் தெரிவிப்பீர்கள் என ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

நீண்டதோர் இடைவெளியின் பின்னர் இணைய வழியில் உங்கள் அனைவரையும் சந்திக்கும் நல்வாய்ப்பிற்கு இறைவனுக்கு நன்றி கூறி நிற்கிறோம்.

அன்னையின் விழா செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள கீழ்க்காணும் இணைப்பை அழுத்தி நேரடியாக இணைந்து கொள்ள முடியும்.

Topic: மரியாஹோம் ஒருங்கிணைப்பாளர் குழு கூட்டம்.

Time: May 16, 2021 06:00 PM Amsterdam, Berlin, Rome, Stockholm, Vienna

Join Zoom Meeting

https://us04web.zoom.us/j/76764557072?pwd=ejVobnYyK1NnN0U0eWQ1WkY3SWJEZz09

Meeting ID: 767 6455 7072
Passcode: thg1p0

உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.

நன்றி –

தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகசபை ஒஸ்லோ – வீக்கன் நிருவாகம் © 2021