அறிவித்தல்

புதிய நிருவாக உறுப்பினர்கள் (2021-2023)

ஒஸ்லோ – வீக்கன் புதிய நிருவாக உறுப்பினர்களை அன்போடு வரவேற்று வாழ்த்தி நிற்கிறோம்.

எமது அன்பான பங்கு மக்களே!

முதற் தடவையாக நீங்கள் இணையவழித் தேர்தல் ஊடாகத் தெரிவு செய்த உறுப்பினர்கள் உட்பட 13 புதிய நிருவாக உறுப்பினர்களையும் இருகரம் கூப்பி வரவேற்று உங்களுக்கு அறிமுகம் செய்வதில் நிறைவடைகிறோம்.

இன்றைய நவீன அவசர உலகின் தீமைகளுக்குள் நாம் புதையுண்டு போகாமல் எம்மைக் காத்தருளும் இறையேசுவில் ஆழ்ந்த நம்பிக்கையும் விசுவாசமும் கொண்டு, எமக்குத் தேவையான ஆன்மீகப் பணிகளை நேர்மையுடன் முன்னெடுக்கக் காத்திருக்கும் புதிய நிருவாக உறுப்பினர்களை பங்கு மக்கள் சார்பில் வாழ்த்துவதில் பேருவகை கொள்கிறோம்.

புதிய நிருவாகத்தில் பலர் முதற் தடவையாக தாமாகவே இணைந்து செயற்பட முன்வந்துள்ளது, பெரிய நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது.

புதிய சிந்தனைகளுடன் ஆன்மீக வழிகாட்டியின் வழிநடத்தலில் ஆரோக்கியமான பணிகள் நடந்தேறும் என உளமார நம்புகிறோம்.

புதிய நிருவாகத்தினர் ஏற்றுக் கொள்ளவுள்ள பணி சிறக்க, அவர்கள் அனைவரையும் பங்கு மக்கள் சார்பில் வாழ்த்துகிறோம். ஒஸ்லோ – வீக்கன் ஆன்மீகசபை ஒரு புதிய பரிமாணத்தில் அனைவரையும் உள்ளீர்த்து, சமமாக மதித்து, நடுநிலை வழுவாது இறை விசுவாசத்துடன் பயணிக்கும் என உறுதியாக நம்புகிறோம்.

புதிய நிருவாகப் பணிகள் வருடாந்தப் பொதுக் கூட்டத்தைத் தொடர்ந்து ஆரம்பிக்கும். அதேவேள பொறுப்பெடுக்கவுள்ள புதிய நிருவாகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாம் செய்யக் காத்திருக்கிறோம் என்ற தகவலோடு, எதிர்காலத்திலும் தேவையான பின்புல உதவிகள் செய்யவும் நாம் தயாராகவுள்ளோம் என்பதையும் அறியத் தருகிறோம்.

நன்றி.
தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகசபை
ஒஸ்லோ – வீக்கன் நிருவாகம் – 2021