மரியாஹொல்ம் திருயாத்திரை மேலதிக பதிவுகள்!!!
இவ்வருடமும் கடந்த வருடம் போன்று திருவிழா இரண்டு நாட்கள் மட்டுமே இடம்பெறும் என்பதை முதலில் அறியத்தருகின்றோம்.
நோர்வே சுகாதார நிறுவனத்தின் கொரோனா விதிகளுக்கு அமைவாக மரியன்னையின் திருவிழா மட்டுப்படுத்தப்பட்ட அளவில், எதிர்வரும் 31ஆம் திகதி ஜூலை மாதம் 2021 ஆம் ஆண்டு சனிக்கிழமை மாலை 16.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கும். தொடர்ந்து திருச்செபமாலை, திருப்பலி, நற்கருணை ஆராதனை என்பன இடம்பெறும்.
மறுதினமான ஓகஸ்ட் மாதம் 1ம் திகதி 2021 ஆம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு திருச்செபமாலையுடன் அன்னையின் விழா ஆரம்பிக்கும். திருச்செபமாலையைத் தொடர்ந்து மரியன்னையின் திருநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, அன்னையின் திருவுருவப் பவனியும், மரியாஹொல்ம் அன்னையின் திருவுருவ ஆசீர்வாதம் இடம்பெறும்.
மரியன்னையின் திருநாள் திருப்பலி நிறைவடைந்த பின்னர் வழமையாக பரிமாறப்படும் மதிய உணவு, தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு வழங்கப்படமாட்டாது என்பதை வருத்தத்துடன் அறியத்தருகின்றோம். அதேவேளை நோய்த்தொற்று கட்டுப்பாடுகளைக் கவனத்தில் கொண்டு நீங்கள் கொண்டுவரும் உணவை மற்றவர்களுடன் பகிர்ந்து உண்பதை முற்றாகத் தவிர்க்குமாறு அன்போடு வேண்டிக் கொள்ளுகின்றோம்.
வழிபாடுகளின் பின்னர் இரண்டு நாட்களும் தேனீர் பரிமாறப்படும் என்ற தகவலையும் உங்களுக்கு அறியத்தருகின்றோம்.
மரியன்னையின் திருவிழா வழிபாடுகளில் பங்குபற்றுவதற்கான பதிவுகள் நிறைவடைந்த நிலையிலும் மரியன்னையின் திருவிழா நிர்வாகத்தினரின் முடிவுகளின் அடிப்படையில் மீண்டும் நாளை 26.08.2021 திங்கட்கிழமை மாலை 8 மணி தொடக்கம் புதைக்கிழமை 28.07.2021 மாலை 8 மணி வரையும் இதுவரை பதியாதவர்கள் தங்களது பதிவுகளை
https://www.checkin.no/event/34140/mariaholm-festival-2021
மேற்கொள்ளலாம் என்பதை அறியத்தருகின்றோம்.
அன்னையின் திருத்தலத்திற்கு வருகை தர பதிவு செய்யும்போது இணையத்தில் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை அவதானமாக படிக்குமாறு அன்போடு வேண்டிக் கொள்ளுகின்றோம்.
மரியாஹொல்ம் அன்னையின் திருத்தலத்திற்கு வருகைதர விரும்பும் அடியார்கள், www.nortamilkat.no என்ற எமது இணையத்தள முகவரியில் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
கொரோனா நோய்த்தொற்றுக் காரணமாக நோர்வே சுகாதார நிறுவனத்தின் நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு மேற்படி முடிவுகள் எடுக்கப்பட்டது.
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள:
மகேந்திரன் – 94 34 72 92
ஜோண்சன் – 95 88 82 78