வழிபாடுகள்

வழிபாடும் அதை புரிந்து கொள்ளுதலும்.

வழிபாடு என்றாலே நமக்கு முன்னே வருவது ஆண்டவரின் சிலுவைப்பலியை நினைவு படுத்தும் சிலுவைப்பலி தான். கல்வாரியில் ஆண்டவர் இயேசு தன்னை பலியாக ஒருமுறை ஒப்புகொடுத்தார். அந்த தியாகப்பலி இன்னும் திருப்பலியில் தொடர்கிறது. கடவுள் தனது ஒரே மகனை எமது பாவங்களுக்கு கழுவாயாக பலியாக்கி எமது பாவங்களின் அழுக்கையும் சுமையையும் அவரை சுமக்க வைத்து அதை தனது திருமகனின் இரத்தத்தினால் கழுவினார். அதன் பின்னர் தான் கொண்டு வந்த மீட்பை இந்த வாழ்வில் அனுபவிக்கவும் அதன் தொடரை மறுவாழ்வில் தொடரவுமே இந்த திருப்பலி.


ஆதி கிறிஸ்தவர்கள் ஆண்டவர் இயேசுவின் இறப்பின் பின்னர் அவரின் உயிர்ப்பை கண்டு மகிழ்ந்தனர். அவரின் விண்ணக நுழைதலின் பின்னர் ஆண்டவர் விட்டு சென்ற நினைவுகளை அவர்கள் தொடர விரும்பினர். எனவே வீடுகளில் ஒன்று கூடினர். இறைவார்த்தையை வாசித்தனர். அதன் பின்னர் தங்கள் கொண்டு வந்த அப்பத்தை பிட்டு அதை தமக்கிடையே பகிர்ந்தனர். இதுதான் முதல் திருப்பலி வடிவம். காலப்போக்கில் கிறிஸ்தவம் பரவத்தொடங்க கடவுளின் ஆண்டவரின் திருப்பலியை கொண்டாடும் விதமும் வளரத்தொடங்கியது. மக்கள் திருப்பலி பிரசன்னத்தில் ஆண்டவரின் பிரசன்னத்தை கண்டனர். காலப்போக்கில் அது கிறிஸ்தவ மக்களிடையே வளரத் தொடங்கியது. அப்போது ஆண்டவரின் பிரசன்னம் உண்மையாகவே உண்டா என்னும் கேள்வி உருவான போது திரிந்து சங்கம் கூடி ஆண்டவரின் திருஉடலாக மாறுகின்றது வெண்மை அப்பம் என்று கூறி “இயல்பு மாற்ற கொள்கை” பிரகடனத்தை வெளியிட்டனர்.


இவ்வாறு திருப்பலி என்பது இலத்தீன் மொழியில் உள்ள Eucharistein என்ற சொல்லில் இருந்து வருகிறது. கடவுளுக்கு நன்றி செலுத்தும் திருவழிபாடாகவும், தியாகப் பலியாகவும், திருப்பந்தி திருவிருந்தாகவும் இது நோக்கப்படுகிறது. இது உண்மையில் அன்பின் பலி ஆண்டவர் இயேசுவின் பாடுகள் அவரின் மரணம் எமக்காக உயிர் என்னும் கொடையை எங்களுக்கு அவர் கொடுத்து இவ்வுலகைக் கடந்த ஒரு வாழ்வை நாங்கள் வாழவென இந்த உலகில் நம்மை அனுமதித்து உருவாக்கி இருக்கிறார். இது தான் ஒவ்வொரு கிறிஸ்தவனும் தனது வாழ்வில் தான் ஏன் இந்த உலகில்அர்த்தம் வாழ்கிறேன் என்பதை கண்டு உணருதல் அவசியம். இல்லை என்றால் அவனது வாழ்வு இந்த உலகிலே தொடங்கி இந்த உலகிலே முடிவது என்றால் எந்த வகையிலும் அவனால் ஒரு அர்த்தம் நிறைந்த வாழ்வை வாழ முடியாது. எனவே உண்மை வாழ்வில் சங்கமிக்க இறைவனோடு ஒன்றிப்போம். திருவழிபாட்டை என்றும் எம் வாழ்வாக்குவோம்.


அருட்பணி. D.E. ரட்ணராஜ் OMI
ஆன்மீக பணியகம்
நோர்வே.
20.01.2023