ஆன்மபணியக ஊடகங்களில் நிழற்படங்கள் மற்றும் ஒளிப்படங்கள் வெளியிடுவதற்கான உத்தியோக பூர்வ அறிவிப்பு.
(இவ்வறிவித்தல் 28.01.2024 அன்று மாலை இடம்பெற்ற எமது திருப்பலியில் அறிவிக்கப்பட்டது)
எமது சமூகவலைத்தளங்களான Facebook, WhatsApp, Viber, Youtube மற்றும் இணையத்தளத்தில் எமது பணியக நிகழ்வுகளின் நிழற்படங்களை ஒளிப்படங்களை நாங்கள் பிரசுரிக்க, வெளியிட தீர்மானித்துள்ளோம். ஆன்ம பணியகத்தின் பொது நிகழ்ச்சிகளில் நீங்கள் இடம்பெறுகின்றபோது அது ஆன்ம பணியகத்திற்கு உரித்தான செய்தியாக அல்லது செயற்பாடாக இருக்கின்றது. அதனை நாங்கள் செய்தியாகவோ அல்லது ஆவணமாகவோ எமது ஊடகங்களில் பிரசுரிக்க வேண்டிய தேவை உள்ளது. எனவே இந்த படங்கள் அல்லது வீடியோக்கள் வெளியிடுவதில் உங்களுக்கு உடன்பாடு இல்லை எனின் அதுபற்றி திரு. றொக்சனுக்கு அல்லது ஆன்மபணியாளர் D. E.Ratnaraj க்கு நீங்கள் தெரிவிக்கவும். அல்லது கீழ் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பவும்.
சமூக வலைத்தளங்கள். (google.com)
தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் ஒஸ்லோ – வீக்கன்
நிருவாகம் ©️ 2024