வருடாந்தப் பொதுக்கூட்டம் காலவரையின்றி ஒத்திவைப்பு !
எமது அன்பான பங்குமக்களே,
நாம் திட்டமிடபடி வருடாந்தப் பொதுக்கூட்டம் எதிர்வரும் 08.08.2021 ல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அருகிவருவதால், மேற்படி பொதுக்கூட்டத்தை காலவரையின்றி தள்ளி வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுளோம் என்பதை வருத்தோடு அறியத்தருகிறோம். எமது எதிர்பார்பிற்கு அமைவாக கொரோனா சட்ட விதிகளில் தளர்வுகள் வருவதற்கான ஏதுநிலை இருப்பதாகத் தென்படவில்லை. இத்தகைய பின்புலத்தில் தற்போதுள்ள கொரோனா சட்ட விதிகளுக்கமைய ஆலய மண்டபத்தில் 1 மீட்டர் இடைவெளியை கடைப்பிடித்து பொதுக்கூட்டத்தை நடாத்துவது அறவே சாத்தியப்பாடற்றது. எனவே இம்முடிவை எமது ஆன்மீகவழிகாட்டி அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய எமது பங்கு மக்களுக்கு அறியத்தருகிறோம். இன்று உலகத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா நுண்கிருமியின் கோரத் தாண்டவத்தால் உறுதியான திட்டமிடல்களை நேர்த்தியாக முன்னெடுக்க முடியாதுள்ளதை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம்.
அந்தவகையில் வருடாந்தப் பொதுக் கூட்டம் இடம்பெறும் காலம், நேரம் தொடர்பான விபரங்கள் காலம் பொருத்தமான நேரத்தில் அறியத்தரப்படும். கொரோனா விதிகள் முற்றாக நீங்கிய நிலையில், அனைவரும் ஆலய மண்டபத்தில் நேரடியாக சந்திக்கும் காலம் விரைவில் அமையும் என நம்புவோம்.
புதிய நிருவாகம் 29.08.2021 முதல் பொறுப்பேற்கும்.
நாம் ஏற்கனவே அறியத்தந்தது போல் நிருவாக மாற்றமானது இடம்பெறும். ஆயினும் இவ் நிருவாக மாற்றமானது வருடாந்தப் பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக இடம்பெறும் என்பதை கவனத்திற் கொள்ளவும். முதற்கட்டமாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி பிற்பகல் 17.00 மணிக்கு இடம்பெறும் திருப்பலி வேளையில் புதிய நிருவாக உறுப்பினர்கள் தமது நிருவாகப் பணிகளை இறைவனுக்கும் பங்குமக்களுக்கும் பிரமாணிக்கமாகச் செயற்படுத்துவர் என உறுதியெடுத்துக்கொள்வர். இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி பிற்பகல் 17.00 மணிக்கு இடம்பெறும் திருப்பலியைத் தொடர்ந்து நிருவாக மாற்றம் இடம்பெறும். அன்று முதல் புதிய நிருவாகம் நடைமுறைக்கு வரும் என்பதையும் அறியத்தருகிறோம்.
நன்றி.
தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகசபை ஒஸ்லோ – வீக்கன் நிருவாகம் © 2021