செவ்வாய் மாலை திருப்பலி
எமது அன்பான பங்குமக்களே !
கடந்த இரண்டு வருடங்களாத் தடைபட்டிருந்த தமிழ்த் திருப்பலி பிரதி செவ்வாய்தோறும் ஒப்புக் கொடுக்கப்படும் என்ற மகிழ்வான தகவலை உங்களுக்கு அறியத்தருவதில் நிறைவடைகிறோம்.
பிரதி வியாழன்தோறும் மாலை வேளைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டு வந்த தமிழ் திருப்பலியானது, எதிர்வரும் 24 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் முதல் செவ்வாய்க்கிழமைகளில் மாலை 19.15 ஒப்புக்கொடுக்கப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.
மேற்படி திருப்பலியானது வியாழக்கிழமைக்கு பதிலீடாக வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் இடம்பெறும் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
எமது மதிப்பிற்குரிய அருட்திரு பிராங்கிளின் அவர்கள் தாமாகவே முன்வந்து செவ்வாய் கிழமைகளில் திருப்பலியை நிறைவேற்றவுள்ளது எம் அனைவரையும் நெகிழ்வடையச் செய்துள்ளது. அருட்தந்தை பிராங்கிளின் அவர்களுக்கு எமது பங்குமக்கள் சார்ப்பில் எமது அன்பான நன்றிகளைத் தெரிவித்து நிற்கிறோம்.
நன்றி –
தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகசபை ஒஸ்லோ – வீக்கன் நிருவாகம் © 2021