அறிவித்தல்

எமது அன்பான நோர்வேத் தமிழ்க் கத்தோலிக்க மக்களே!

எமது அன்பான நோர்வேத் தமிழ்க் கத்தோலிக்க மக்களே!

அண்மை நாட்களாக கொரோனாத் தொற்றுக்குள்ளாகிய தனி ஒருவரைத் தவிர இதுவரை வேறு எவரும் பாதிப்பிற்குள்ளாகவில்லை என்பதை உங்களுக்கு அறியத் தருவதில் மகிழ்வடைகிறோம். நோர்வே சுகாதார அமைப்பினரிடம் இருந்து வேறு அறிவித்தல்கள் இதுவரை கிடைக்காததால் தனிமைப்படுத்தப்பட வேண்டிய கால எல்லை நேற்றைய தினத்துடன் (08.07.2020) நிறைவு பெற்றுள்ளது என்பதையும் அறியத் தருகிறோம். மேலும் எமது ஆன்மீகச் செயற்பாடுகள் சார்ந்த அறிவித்தலை விரைவில் அறியத் தருகிறோம்.

மேற்படி தகவலோடு வேறு இரண்டு விடயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.

எமது ஆலயத்தில் தமிழ் மொழி ஆன்மீக வழிகாட்டியாக மதிப்பிற்குரிய அருட்தந்தை ஜெகத் அவர்கள் தற்காலிகமாக ஆன்மீகப் பணிகளை முன்னெடுக்கவுள்ளார் என்ற செய்தியையும் உங்களுக்கு தெரியப்படுத்துவதில் நிறைவடைகிறோம்.

மேலும் ஓர் முக்கிய விடயத்தை அனைவருக்கும் தெளிவுபடுத்த கடமைப்பட்டுள்ளோம். Oslo-Viken தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகத்தின் அதிகாரபூர்வ வலைத்தளங்களாக www.nortamilkat.no மற்றும் எமது முகநூல் (Facebook) மட்டுமே என்பதை அனைவரும் கவனத்திற் கொள்ளவும். மேலும் அவசர செய்திகளை குறுந்தகவல் (SMS) ஊடாக எமது நிர்வாகத்தால் உங்களுக்கு அனுப்பப்படும். இவை தவிர வேறு ஊடக வழிகளில் எமது செயற்பாடுகள் தொடர்பான எந்த அறிவித்தல்களும் வழங்கப்படமாட்டாது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

Catholic gospel என்னும் Viber வலைத்தளத்திற்கும் Oslo-Viken தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்திற்கும் எந்த விதமான தொடர்புகளும் கிடையாது என்பதையும் அறியத்தருகிறோம். மேற்படி Catholic gospel என்னும் Viber வலைத்தளம் ஒரு தனிநபரால் தனது விருப்பிற்கேற்ப தகவல்கள் பரிமாறும் ஒரு தளமாகும். இத்தளத்தில் எமது அதிகாரபூர்வ செய்திகள் / தகவல்கள் மீள்பதிவு செய்யப்படுகிறது. இதனால் Catholic gospel என்னும் Viber வலைத்தளமும் எம்மால் இயக்கப்படுவததாக மக்கள் சிலர் எமது நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்ததால் இவ்விடயத்தை தங்களின் அவதானத்திற்குக் கொண்டு வருகிறோம்.

மேலும் Catholic gospel வலைத்தளத்தை இயக்கும் நபருடன் இறுதியாகக் கடமையாற்றிய ஆன்மிக வழிகாட்டி எமது பொதுவான அறிவித்தல்கள், செய்திகளை தனிப்பட்ட முறையில் வெளியிடுவது முறையற்ற, அநாகரிகமான செயற்பாடு எனத் தெரிவித்திருந்த போதிலும், அக்குறிப்பிட்ட நபர் தொடர்ந்தும் எமது அதிகாரபூர்வ செய்திகள், அறிவித்தல்களை சமூக வலைத் தளமான Catholic gospel Viber இல் பதிவிடுவதையிட்டு நாம் கவலையடைகிறோம்.

எமது கையெழுத்துடன் அதிகாரபூர்வமாக வெளிவரும் விடயங்களை, எமது உரிமம் கோராதது வேறு வலைத்தளங்களில் மீள்பதிவு செய்ய வேண்டாம் என வினயமாகக் கேட்டுக் கொள்கிறோம்.

Catholic gospel என்னும் Viber வலைத்தளம் என்பது ஒரு தனிநபருடையது என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.

நன்றி.

இவ்வண்,
Oslo-Viken தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப் பணியக நிர்வாகம் 2020.