எமது அன்பான பங்கு மக்களே!
நோய்த்தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்
எமது அன்பான பங்கு மக்களே!
ஒஸ்லோ நகராட்சியினர் கொரோனா விதிகளில் தளர்வுகளை மேற்கொண்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். அந்த வகையில் எமது ஆலயத்தில் ஏற்படவுள்ள விதிமுறை மாற்றங்களை எமது பங்குத் தந்தை எமக்கு அறியத்தந்துள்ளார். அதன் தமிழாக்கம் வருமாறு:
இன்று 16.06.2021 முதல் நடைமுறைக்கு வரும் விதிகளின் முக்கிய அம்சங்கள்.
- திருப்பலிகளில் 110 பக்தர்கள் பங்குகொள்ள முடியும்.
- billett.katolsk.no என்னும் இணையத்தளத்தில் திருப்பலி இடம் பெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக முற்பகல் 10.00 – 12.00 பதிவுகளை மேற்கொள்ளலாம்.
- நோய்த் தொற்று ஏற்பட்டால் அதைக் கண்டறியும் நோக்கோடு பதிவில் உள்ள பெயர்ப்பட்டியல் 10 நாட்களுக்கு பாதுகாக்கப்பட்டு பின்னர் அழிக்கப்படும்.
- திருப்பலியை ஒப்புக்கொடுக்கும் குருவானவர் நோய்த் தொற்று விதிகள் சரியாகக் கடைப்பிடிக்கப்படுவதற்கு பொறுப்பாக இருப்பார்.
- பக்தர்கள் கைகளை(sprite hendene) சுத்தமாக வைத்திருப்பதுடன் 1 மீட்டர் இடைவெளி பேணப்படுதல் வேண்டும்.
- அமைதியான மன்றாட்டுகளுக்காக கிழமை நாட்களில் காலை 09.00 முதல் பிற்பகல் 17.00 மணி வரையும், சனியன்று காலை 10.00 முதல் பிற்பகல் 15.00 மணி வரையும் ஆலயத்தின் கதவுகள் திறந்திருக்கும். நோய்த் தொற்றைக் கண்டறியும் நோக்கோடு ஆலயத்தை தரிசிக்கும் அனைவரும் நுழைவாயிலில் பெயர்களை பதிவு செய்தல் வேண்டும்.
- பக்தர்கள் அனைவரும் ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே அமர்தல் வேண்டும். ஒரு வாங்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பக்தர்கள் உட்கார முடியும், அதேவேளை வேறு குடும்பத்தைச் சேர்ந்தவராயின் 3 பக்தர்கள் மட்டும் ஒரு வாங்கில் உட்கார முடியும். திருப்பலி வேளைகளில் ஆலயத்திற்குள் நடமாடுவது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
- திருப்பலி நிறைவடையும் வரை பக்தர்கள் கொடுக்கப்பட்ட இடத்தில் இருத்தல் வேண்டும். குருவானவர் நற்கருணையை உங்கள் இருக்கைக்கு வந்து கையில் மட்டுமே வழங்குவார்.
- திருப்பலி நிறைவடைந்ததும் பக்தர்கள் உடனே ஆலையத்தை விட்டு வெளியேற வேண்டும். தொடர்ந்தும் ஆலயத்திற்குள்ளே அல்லது நுழைவாயிலில் நிற்பது முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். தனிப்பட்ட பிராத்தனைகள் ஆலயத்திற்கு வெளியிலோ அன்றேல் இல்லங்களிலோ மேற்கொள்ள வேண்டும்.
- பக்தர்களை ஆலயத்தில் வரவேற்று உரிய இடங்களில் அமரச் செய்வதற்கான வழிகாட்டிகள் இருப்பர்.
மேற்கூறிய விதிமுறைகள் நோர்வீஜிய சுகாதார அமைப்பினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் எமது பங்குத் தந்தையால் எமக்குத் தெரியப்படுத்தப்பட்ட விதிகளில் முக்கியமானதை மட்டுமே இங்கு தமிழாக்கம் செய்து எமது பங்குமக்களுக்கு அறியத்தருகிறோம்.
எதிர்வரும் ஞாயிறு பிற்பகல் 17.00 மணிக்கு தமிழ்த் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும் என்பதையும் அறியத்தருகிறோம். எனவே பதிவுகள் வெள்ளியன்று காலை 10.00 – 12.00 க்கு ஆரம்பிக்கும்.
நன்றி – தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகசபை ஒஸ்லோ – வீக்கன் நிருவாகம் © 2021