அறிவித்தல்!
வணக்கம்!
எமது ஆன்மீகசபை மக்கள் அனைவருக்கும் எமது அன்பான வணக்கங்கள்.
இறைஇயேசுவின் ஆசீரிலும் அன்பிலும் நீங்கள் அனைவரும் நலமுடன் இருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.
ஞாயிறு ஆராதனைகள் நடைபெறாமல் இருப்பதும் தவக்கால வழிபாடுகளை நடத்தமுடியாமல் இருப்பதும்
எமக்கு மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது.
தவக்கால வழிபாடுகளை எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பாக ஆயர்அவர்களிடம் இருந்து அறிவுறுத்தல்களை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்.
அவருடைய அறிவுறுத்தல்களின் பிரகாரம் நாம் வழிபாடுகளை முன்னெடுப்போம்.
எமக்கு சாத்தியமான பதில் கிடைக்கும் பட்சத்தில் உங்களிடம்
மீண்டும் தொடர்பு கொண்டு மேலதிக விபரத்தை தெரியப்படுத்துவோம்.
நாம் அனைவரும் இறைஇயேசுவின் பாதுகாப்பில் நலமுடன் இருந்து மீண்டும் ஒன்று கூட இறைஇயேசுவை வேண்டுகின்றோம்.
நன்றி
இங்ஙனம்
தமிழ்கத்தோலிக்க ஆண்மீகசபை நிர்வாகம் 2020