Mariaholm யாத்திரை 2020
Mariaholm திருயாத்திரை 2020 பற்றிய முக்கிய அறிவித்தல்கள்!
V,
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் 2 ம் திகதிகளில் அன்னையின் திருவிழா மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கொண்டாடப்படவுள்ளது அறிந்ததே, அந்தவகையில் கடந்த ஞாயிறு 19ம் திகதி பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதையும் நீங்கள் அறிவீர்கள். சிலர் பதிவுகளை இரண்டு தடவைகள் மேற்கொண்டதால் இன்னும் சிலர் அன்னையின் திருத்தலத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேற்படி பதிவுகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, நாளை திங்கட்கிழமை பிற்பகல் 08.00 மணிக்கு இதுவரையில் தமது பெயர்களைப் பதியாதோர், புதிய பதிவுகளை www.nortamilkat.no என்ற எமது இணையத்தளத்திலோ அல்லது TKSOA என்ற எமது முகநூலிலோ பதிவுகளை மேற்கொள்ளலாம். தயவு செய்து கடந்த ஞாயிறு பதிவு செய்தவர்கள் மீள் பதிவு செய்ய வேண்டாம் எனத் தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
எதிர்வரும் புதன்கிழமை பதிவுகள் மேற்கொண்ட அனைவருக்குமான நுழைவுச் சீட்டுக்கள் மின்னஞ்சல் மூலம் 29.07.20 அன்று அனுப்பி வைக்கப்படும். அவ்வாறு புதன் நள்ளிரவின் பின்னர் மின்னஞ்சல் கிடைக்கப்பெறாதவர்கள் 46545192 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் நுழைவுச் சீட்டைப் பெற்று உங்கள் வருகையை உறுதி செய்யலாம் .
நோர்வே சுகாதாரத் துறையின் சில முக்கிய தகவல்கள் அன்னையின் திருத்தலத்தில் வைத்து எம்மால் அறியத்தரப்படும். மேற்படி தகவல்களைச் செவிமடுத்து அதற்கேற்ப நடந்து கொள்வதால் கொரோனா வைரஸ் கிருமியின் தாக்குதலில் இருந்து எம்மைப் பாதுகாப்பதோடு ஏனையவரையும் பாதுகாக்கலாம்.
திருநாள் திருப்பலியைத் தொடர்ந்து இவ்வருடம் மதிய உணவு பரிமாறப்படாது என்பதை அறியத்தருகிறோம். தற்போதய அசாதாரண சூழலை கவனத்திற் கொண்டு நீங்கள் கொண்டு வரும் உணவுகளைக் கூட பகிர்ந்து கொள்ளாது இருக்குமாறு வினயமாக வேண்டுகிறோம். வழிபாடுகள் நிறைவடைந்ததும் இரண்டு நாட்களும் தேனீர் மட்டும் பரிமாறப்படும்.
நிறைவாக Mariaholm மரியன்னையின் திருவிழாவில் அதிக பட்சம் 200 பேர் மட்டுமே பங்குகொள்ள முடியும் என்பதால் பதிவுகளை மேற்கொள்ளாத எவரும் மரியன்னையின் திருவிழா இடம் பெறும் Mariaholm புனித ஸ்தலத்திற்கு வருவதை முற்றாகத் தவிர்க்குமாறு மிகவும் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி..
IV,
Mariaholm மரியன்னையின் திருவிழா பற்றிய செயற்பாட்டுக் குழுவினரின் அறிவித்தல்.
கொரோனா தொற்றுநோய் காரணத்தால் இவ்வருடம் மரியன்னையின் புனித யாத்திரை, இரண்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவாக மட்டுப்படுத்தப்பட்டளவில் இடம் பெறும் என்பதை வருத்தத்துடன் அறியத்தருகிறோம்.
நோர்வே சுகாதார அமைப்பு விடுத்துள்ள அறிவுறுத்தலுக்கு அமையவே விழாச் செயற்பாடுகள் அனைத்தும் முன்னெடுக்கப்படும்.
அந்த வகையில் அதிக பட்சமாக 200 பேர் மட்டுமே திருவிழா நிகழ்வில் கலந்து கொள்ள முடியும். அத்தோடு இவ்வருடம் மரியன்னையின் திருத்தலத்தில் தங்கியிருப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
திருவிழா வழிபாடுகள் இரண்டு நாட்கள் மட்டும் இடம் பெறும்.
01.08.2020 சனி மாலை 16: 30 மணிக்கு கொடியேற்றத்துடன் திருச்செபமாலையும், திருப்பலியும், நற்கருணை ஆராதனையும் இடம் பெறும்.
திருவிழாத் திருப்பலி 02.08.2020 ஞாயிறு முற்பகல் 11:30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பித்து திருநாள் திருப்பலியுடன் கொடியிறக்க பிரியாவிடை செபத்துடன் அன்னை மரியின் சொரூப ஆசீர்வாதமும் இடம்பெறும்.
இரண்டு நாள் திருவிழா வழிபாடுகளில் பங்குபற்றுவதற்கான பதிவுகளை எமது இணைத்தளமான www.nortamilkat.no இல், TKSOAஇல் இன்று மாலை 8:00 மணி முதல் மேற்கொள்ளலாம். பதிவு செய்யும் போது எமது இணையதளத்தில் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைக் கவனத்திற் கொண்டு பதிவுகளை மேற்கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறோம்.
உங்கள் கவனத்திற்கு !!!
திருநாள் திருப்பலியைத் தொடர்ந்து இவ்வருடம் மதிய உணவு பரிமாறப்படாது என்பதை அறியத்தருகிறோம். தற்போதய அசாதாரண சூழலை கவனத்திற் கொண்டு நீங்கள் கொண்டு வரும் உணவுகளைக் கூட பகிர்ந்து கொள்ளாது கொரோனாவில் இருந்து எம்மை நாமே பாதுகாப்பதோடு ஏனையவரையும் பாதுகாப்போம்.
வழிபாடுகள் நிறைவடைந்ததும் இரண்டு நாட்களும் தேனீர் மட்டும் பரிமாறப்படும்.
அன்னை மரியின் விழா சிறப்புற உங்கள் அனைவரினதும் ஒத்தாசையை வேண்டி நிற்கிறோம்.
இங்ஙனம்,
Mariaholm மரியன்னை செயற்பாட்டுக் குழுவினர்
மேலதிக விபரங்களுக்கு:- www.nortamilkat.no
Facebook:- TKSOA
தொடர்புகள் :
அன்ரன் அமரபாலா 91113645
மகேந்திரன் மரியாம்பிள்ளை 94347292
III,
01.08.2020 சனி 16:30 மணி கொடியேற்றத்துடன் செபமாலை, திருப்பலி, நற்கருணை ஆராதனை.
02.08.2020 ஞாயிறு 11:30 மணி செபமாலையுடன் திருநாள் திருப்பலி.
விண்ணப்ப நிபந்தனைகள்.
COVID -19
- கடந்த 30 நாட்களில் கொறோணா தொற்று நிரூபிக்கப்பட்டவர்கள்.
- கடந்த 7நாட்களுக்குள் தடிமன், காய்ச்சல்,இருமல் போன்ற சுவாசத் தொற்றுநோய் அடைந்தவர்கள்.
- கடந்த 7 நாட்களில் மணம், சுவை உணர்வு இழந்தவர்கள்.
- பயணம் அல்லது கொறோணா தொற்றுநோய் உள்ளவர்களுடன் இருந்த காரணத்தால் அல்லது வேறு எந்த காரணத்தாலோ தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள்.
மேற்குறிப்பிட்ட ஏதாவது ஒருவகையில் அடங்கும் நபர்கள் மரியாஹொல்ம் விண்ணப்பத்தை நிரப்பவேண்டாம்.
ஆவணி முதலாம் அல்லது இரண்டாம் திகதிகளில் மேற்குறிப்பிட்ட ஒரு வகையில் நீங்கள் அடங்கினால் உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டாலும் மரியாஹொல்ம் வர முயற்சிக்க வேண்டாம். நான் நோர்வே நாட்டின் தனிமைப்படுத்தும் சட்டங்களை அறிவேன் என்றும் மேற்கூறிய தகவல் அனைத்தும் உண்மை என்றும் உறுதி செய்து கொள்கின்றேன்.
நோய்கள் ஆபத்து உடையவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என தயவுடன் கேட்டு கொள்கிறோம். (RISIKO GRUPPE)
- De som har fått påvist Covid-19 i løpet av siste 30 dager.
- De som har hatt luftveisinfeksjon i løpet av siste 7 dager.
- De som har hatt tap av lukt – eller smaksans i løpet av siste 7 dager.
- De som er i karantene eller isolasjon på grunn av reise, nærkontakt med påvist Covid 19 smittet eller av annen årsak.
Tilhører du en av de ovenfor nevnte kategori, skal du ikke melde deg til Mariaholm.
Om du uheldigvis havner i en av de fire kategoriene på 1. eller 2. August skal du heller ikke møte opp på Mariaholm. Jeg er kjent med norske retningslinjer for karantene og bekrefter at informasjon gitt over er korrekt.
Vi anbefaler ikke de med helse risiko å melde seg på Mariaholm.
Generell informasjon om korona på tamilsk. (FHI)
Råd og informasjon til risikogrupper. (FHI)
II,
புனித மரியாள் யாத்திரை முற்பதிவுகள் 19.07.2020 மாலை 08 மணிமுதல் ஆரம்பமாகும் என்பதை அறியத்தருகின்றோம்.
I,
நோர்வேயின் அரச சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இந்த வருடம் இரு நாட்கள் மட்டுமே மரியன்னையின் திருயாத்திரையை நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 200 பேர் மட்டுமே திருயாத்திரையின் போது பங்குகொள்ளமுடியும்
01.08.2020 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு திருப்பலியும் நற்கருணை ஆராதனையும் நடைபெறும்.
02.08.2020 ஞாயிறு காலை 12 மணிக்கு திருநாள் திருப்பலி நடைபெறும்.
தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகள் காரணமாக நாம் வழமைபோல் பயன்படுத்தும் அனைத்து அறைகளும் இம்முறை பயன்படுத்துவது நிறுத்தப்பட்டுள்ளது.
மரியன்னையின் திருயாத்திரையில் பங்குபற்றுவதற்கான பதிவுகள் மற்றும் மேலதிக விபரங்கள் Mariaholm திருயாத்திரை குழுவினால் பின்னர் அறிவிக்கப்படும்.