அறிவித்தல்மரியாஹோல்ம்

Mariaholm மரியன்னையின் திருத்தல திருவிழா பற்றிய அறிவித்தல்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் 2 ம் திகதிகளில் அன்னையின் திருவிழா மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கொண்டாடப்படவுள்ளது அறிந்ததே, அந்தவகையில் கடந்த ஞாயிறு 19ம் திகதி பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதையும் நீங்கள் அறிவீர்கள். சிலர் பதிவுகளை இரண்டு தடவைகள் மேற்கொண்டதால் இன்னும் சிலர் அன்னையின் திருத்தலத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேற்படி பதிவுகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, நாளை திங்கட்கிழமை பிற்பகல் 08.00 மணிக்கு இதுவரையில் தமது பெயர்களைப் பதியாதோர், புதிய பதிவுகளை www.nortamilkat.no என்ற எமது இணையத்தளத்திலோ அல்லது TKSOA என்ற எமது முகநூலிலோ பதிவுகளை மேற்கொள்ளலாம். தயவு செய்து கடந்த ஞாயிறு பதிவு செய்தவர்கள் மீள் பதிவு செய்ய வேண்டாம் எனத் தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
எதிர்வரும் புதன்கிழமை பதிவுகள் மேற்கொண்ட அனைவருக்குமான நுழைவுச் சீட்டுக்கள் மின்னஞ்சல் மூலம் 29.07.20 அன்று அனுப்பி வைக்கப்படும். அவ்வாறு புதன் நள்ளிரவின் பின்னர் மின்னஞ்சல் கிடைக்கப்பெறாதவர்கள் 46545192 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் நுழைவுச் சீட்டைப் பெற்று உங்கள் வருகையை உறுதி செய்யலாம் .
நோர்வே சுகாதாரத் துறையின் சில முக்கிய தகவல்கள் அன்னையின் திருத்தலத்தில் வைத்து எம்மால் அறியத்தரப்படும். மேற்படி தகவல்களைச் செவிமடுத்து அதற்கேற்ப நடந்து கொள்வதால் கொரோனா வைரஸ் கிருமியின் தாக்குதலில் இருந்து எம்மைப் பாதுகாப்பதோடு ஏனையவரையும் பாதுகாக்கலாம்.
திருநாள் திருப்பலியைத் தொடர்ந்து இவ்வருடம் மதிய உணவு பரிமாறப்படாது என்பதை அறியத்தருகிறோம். தற்போதய அசாதாரண சூழலை கவனத்திற் கொண்டு நீங்கள் கொண்டு வரும் உணவுகளைக் கூட பகிர்ந்து கொள்ளாது இருக்குமாறு வினயமாக வேண்டுகிறோம். வழிபாடுகள் நிறைவடைந்ததும் இரண்டு நாட்களும் தேனீர் மட்டும் பரிமாறப்படும்.
நிறைவாக Mariaholm மரியன்னையின் திருவிழாவில் அதிக பட்சம் 200 பேர் மட்டுமே பங்குகொள்ள முடியும் என்பதால் பதிவுகளை மேற்கொள்ளாத எவரும் மரியன்னையின் திருவிழா இடம் பெறும் Mariaholm புனித ஸ்தலத்திற்கு வருவதை முற்றாகத் தவிர்க்குமாறு மிகவும் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி..