அறிவித்தல்

புதிய அறிவித்தல்

பங்குமக்களின் கவனத்திற்கு !

அன்புடையீர்,

நோர்வே அரசாங்கத்தின் தொற்றுக் கட்டுப்பாட்டு விதிகளில் புதிய இறுக்கமான நடைமுறைகள் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். மேற்படி விதிகளின் நெருக்கடியால் எதிர்வரும் 10.01.2021 ஞாயிறு மற்றும் 17.01.2021 ஞாயிறு ஆகிய இருவாரங்களும் திருப்பலிகள் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்க முடியாதுள்ளதை வருத்தத்துடன் அறியத்தந்திருந்தோம்.

மேலும் இப் புதிய நடைமுறையானது இரண்டு வாரங்களுக்கு அமுலில் இருக்கும் என்பதோடு, வேறு புதிய தகவல்கள் எம்மை வந்தடைந்ததும் உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்ளக் காத்திருக்கின்றோம்.

இக்கொடூர நோயால் பாதிப்பிற்குள்ளான அனைவருக்காவும் மன்றாடும் அதேவேளை இந்நோய்த் தாக்கத்திலிருந்து இப்பூவுலகை நம் ஆண்டவராகிய இயேசுக்கிறீஸ்து விரைவில் மீட்டு இரட்சித்து, எல்லோரும் சேமமாக வாழ அருள்புரிவாராக.

 http://www.katolsk.no/nyheter/2020/11/regjeringens-nye-smittevernstiltak

நன்றி…

தமிழ்க் கத்தோலிக்க
ஆன்மீகசபை
ஒஸ்லோ – வீக்கன் நிர்வாகம் © 2021