அறிவித்தல்

நிர்வாக உறுப்பினர் தேர்வு

எமது அன்புக்குரிய உறவுகளே !

எதிர்வரும் ஏப்பிரல் மாதம் ஆன்மீகசபை நிர்வாக உறுப்பினரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெறவுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

அந்த வகையில் தேர்தலில் நிற்கத் தகுதியுள்ள வேட்பாளர்கள் என உங்களால் அனுப்பப்பட்ட சிலரின் பெயர்கள் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது. அவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் உளவிருப்பத்தை அறிந்த வண்ணம் உள்ளோம். இன்னும் மேலதிக வேட்பாளரை நாம் எதிர்பார்க்கிறோம்.

எனவே இத்தேர்தலில்  நீங்கள் விரும்பும் ஒரு நபரையோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவரையோ தேர்தலில் வேட்பாளராக நிற்க தகுதியுள்ளவர் என நீங்கள் அடையாளம் கண்டால் அவர்களை எமக்குப் பரிந்துரைக்குமாறு உரிமையோடு வேண்டுகிறோம். உங்கள் பரிந்துரையை  எமது மின்னஞ்சல் முகவரியான valg@nortamilkat.no  இல் வேட்பாளர் பெயர், தொலைபேசி எண்ணைக் குறிப்பிட்டு அனுப்பவும்.
அல்லது திரேசம்மா (மரியா) தொலைபேசி எண்: 90937933
யூட் தொலைபேசி எண் : 46545192
நிரஞ்சன் : 91827121
ஆகிய தொலைபேசி எண்களுக்கு குறுந்தகவல் (SMS) மூலமும் தெரியப்படுத்தலாம்.

உங்கள் விருப்பங்களை எழுத்தில் அனுப்பும்படி பணிவாக வேண்டுகிறோம். மேலும் வாக்களிப்பு சார்ந்த முக்கிய விபரங்களை விரைவில் அறியத்தருகிறோம்.

நன்றி –
தேர்தல் பணிக்குழு 2021
திரேசம்மா (மரியா)
யூட்
நிரஞ்சன்