அறிவித்தல்

தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் ஒஸ்லோ – வீக்கன் தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுகம் 2023.

தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் ஒஸ்லோ – வீக்கன் தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுகம் 2023.

எமது அன்பான உறவுகளே !
எதிர்வரும் ஐப்பசி 22ம் திகதி இடம்பெறவுள்ள தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியக தேர்தலில் தோற்றவுள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறோம். இறைவனுக்கும் ஆன்மீகசபைக்கும் பிரமாணிக்கமாகச் செயற்பட தமது முழுமையான விருப்பத்தோடு 05 வேட்பாளர்கள் தயாராகவுள்ளார்கள். யாப்புவிதிகள் பிரகாரம் தேர்தல் நடைபெற ஒரு மாத காலத்திற்கு முன்பாக வேட்பாளர்களை நாம் உங்களுக்கு அறியப்படுத்துகிறோம்.

  1. Anton Suresh Jacintha 51 År
  2. Concius Francis 52 År
  3. Iruthayarajah Iruthayamanokaraseelan 48 År
  4. Rajeswaran Savarimuthu 59 År
  5. Roxen Wasanthakumar Bernard 48 År

தேர்தல் அனைத்தும் யாப்பு விதிகளுக்குட்பட்டு இடம்பெறுகிறது. தேர்தல் குழுவினராகிய நாம் எமக்குத் தரப்பட்ட பணிகளை தன்னிச்சையாகச் செய்யும் அதேவேளை ஆன்மீக வழிகாட்டியின் ஆலோசனையும், அறிவுறுத்தலும், ஆசீரும் கிடைக்கப் பெற்றுள்ளதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

வாக்குரிமை.
கவனத்திற்கொள்ளவேண்டியவை விடயங்கள் !
• 5 வேட்பாளர்களில் 4 வேட்பாளர்களுக் மட்டுமே வாக்களிக்க வேண்டும்.
• 2022 வருடத்திற்கான நிதிப்பங்களிப்பு செய்திருத்தல் வேண்டும்.
• 16 வயது / 16 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.

இத்தேர்தல் நேர்த்தியாகவும், சிறப்பாகவும் இடம்பெற உங்கள் அனைவரின் ஆதரவையும் ஒத்தாசையையும் வேண்டி நிற்கிறோம்.

நன்றி –
தேர்தல் பணிக்குழு 2023