அறிவித்தல்

தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகசபை ஒஸ்லோ – வீக்கன் தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுகம் 2021

ஒஸ்லோ – வீக்கன் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகசபை தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுகம் 2021.

எமது அன்பான உறவுகளே !
எதிர்வரும் ஏப்பிரல் 18ம் திகதி முதல் 25ம் திகதி வரை இடம்பெறவுள்ள தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகசபை தேர்தலில் தோற்றவுள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறோம். இறைவனுக்கும் ஆன்மீகசபைக்கும் பிரமாணிக்கமாகச் செயற்பட தமது முழுமையான விருப்பத்தோடு 08 வேட்பாளர்கள் தயாராகவுள்ளார்கள். யாப்புவிதிகள் பிரகாரம் தேர்தல் நடைபெற ஒரு மாத காலத்திற்கு முன்பாக வேட்பாளர்களை நாம் உங்களுக்கு அறியப்படுத்துகிறோம்.

வேட்பாளர்களில் ஒருவர் தவிர்ந்த ஏனெயோர் இதுவரையில் ஆன்மீகசபை நிர்வாகத்தில் பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதிய வேட்பாளர்களாக 50 விழுக்காடு ஆண்களும், 50 விழுக்காடு பெண்களும் தேர்தலில் தோற்றுவது மகிழ்வானதே. தேர்தலில் நீங்கள் வாக்களிக்கும் போது மேலே நிழற்படங்களில் உள்ள வேட்பாளர்களில் 4 வேட்பாளர்களை நீங்கள் தெரிவு செய்ய வேண்டும்.

தேர்தலில் வாக்களிக்க நீங்கள் செய்ய வேண்டியது.

  • உங்கள் மின்னஞ்சல் முகவரி, முதற் பெயர், குடும்பப் பெயர், பிறப்பு விபரங்களை மார்ச் 31ம் திகதிக்கு முன்பாகஎமக்கு அனுப்பி வைக்க வேண்டும். கீழ்காணும் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம். https://forms.gle/qaMizScz9FhcvfmdA  அல்லது எமது மின்னஞ்சல் முகவரியான valg@nortamilkat.no ற்கு அனுப்பிவைக்கவும். கணிசமானோர் ஏற்கனவே தமது விபரங்களை எமக்கு அனுப்பியுள்ளனர். அவர்களுக்கு எமது நன்றிகள்.
  • தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகசபைக்கான உங்கள் நிதிப்பங்களிப்பை எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்பாகச் செலுத்தியிருத்தல் வேண்டும். இணையத்தில் தேர்தல் நடைபெறுவதால் தயவு செய்து உங்கள் நிதிப்பங்களிப்பை விரைவாகச் செலுத்தி வாக்களிக்கும் உரிமையை பெற்றுக் கொள்ளுங்கள்.

தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது?

  • தேர்தலில் வாக்களிக்க உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு எம்மால் ஓர் இணைப்பு (link) அனுப்பப்படும். அவ்விணைப்பை அழுத்தி நீங்கள் வாக்களிக்கலாம்.
  • 08 வேட்பாளர்களில் உங்களுக்கு விருப்பமான 04 வேட்பாளர்களை இனம்கண்டு வாக்களிக்க வேண்டும்.

கவனிக்கவேண்டியது!

  • உங்கள் மின்னஞ்சல் முகவரி இல்லாவிடின் எம்மால் வாக்களிப்பதற்கான இணைப்பை அனுப்பமுடியாது.
  • உங்கள் நிதிப்பங்களிப்பானது 31ம் திகதி மார்ச் மாதத்திற்கு முன்னர் செலுத்தப்பட்டிருந்தால் மட்டுமே வாக்களிப்பதற்கான இணைப்பு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
  • நாம் பதிவுசெய்த விபரங்களைச் சரிபார்க்க வாக்களிப்பிற்கு அண்ணளவாக ஒரு வாரம் முன்பாக உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும். அதில் நீங்கள் வாக்களிக்கத் தகுதி கொண்டது உறுதிப்படுத்தப்படும். இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்யது யாதெனில் உங்களுக்கு அனுப்பபடும் மின்னஞ்சல் சிலவேளைகளில் SPAM-MAPPE ற்குள் செல்வதற்கான வாய்ப்புள்ளது, எனவே எம்மோடு தொடர்புகொள்ள முன்பு SPAM-MAPPE ல் மின்னஞ்சல் இல்லை என்பதை உறுதிசெய்யவும்.

தேர்தல் தொடர்பான மேற்கூறிய தகவல்கள் அனைத்தும் யாப்பு விதிகளுக்குட்பட்டு இடம்பெறுகிறது. தேர்தல் குழுவினராகிய நாம் எமக்குத் தரப்பட்ட பணிகளை தன்னிச்சையாகச் செய்யும் அதேவேளை ஆன்மீக வழிகாட்டியின் ஆலோசனையும், அறிவுறுத்தலும், ஆசீரும் கிடைக்கப் பெற்றுள்ளதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இத்தேர்தல் நேர்த்தியாகவும், சிறப்பாகவும் இடம்பெற உங்கள் அனைவரின் ஆதரவையும் ஒத்தாசையையும்  வேண்டி நிற்கிறோம்.

நன்றி –
தேர்தல் பணிக்குழு 2021