அறிவித்தல்மறைக்கல்வி விழா

மறைக்கல்வி விழா 2023

ருடா வருடம்  ஒஸ்லோ நோர்வே தமிழ் ஆன்மீக பணியகத்தில் மறைக்கல்விப் பிள்ளைகளும் மறையாசிரியர்களும் இணைந்து கொண்டாடும்  மறைக்கல்வி தினம் 29.10.2023  ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பான முறையில் Oslo Bredtvetveien 12 இல் உள்ள தூய யோவான் பங்கு ஆலயத்தில் தமிழில் கொண்டாடப்பட்டது. அன்றைய நிகழ்வுகள் அனைத்தும் மாலைத் திருப்பலியுடன் ஆரம்பமாயின. பிள்ளைகளும் மறையாசிரியர்களும் பவனியாக ஒளி விளக்குகள் மற்றும் கத்தோலிக்க திரு அவையின் அடைளாயங்களை காண்பிக்கும் திருச்சிலுவை செபமாலை தூய வேதாகமம் என்பவற்றையும் ஏந்தியபடி சென்றனர். திருப்பலியின்  வருகை பாடல் நேரம் ஆன்ம பணியாளர் அருட்பணி. D.E. ரட்ணராஜ் OMI அவர்களைத் தொடர்ந்து மறையாசிரியர் பிரதிநிதிகள் மற்றும் மறைக்கல்விபிள்ளைகள் சார்பாக குத்துவிளக்கு ஏற்றினர். தொடர்ந்து திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது. வழிபாட்டை மறைக்கல்வி மாணவர்கள் சிறப்பித்தனர். திருப்பலி  முடிந்தபின்னர் மறையாசிரியர் பெற்றோர் சார்பாக வந்திருந்த மக்களுக்கு சிற்றுண்டி மற்றும் தேநீர் வழங்கப்பட்டது. தொடர்ந்து அன்றைய நிகழ்வுகளை மரியாயாசிரிய தலைவி திருமதி சந்திரா சார்ள்ஸ் தமது வரவேற்புரையை நிகழ்த்தினார். சிறு கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. பாடல்கள் மற்றும் நடனங்கள் நிகழ்வுகளை மெருகூட்டின. இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினாராக அருட்பணி எரிக் ரூட் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிதார். மறைக்கல்வி பிள்ளைகளுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

    “தமிழில் பிள்ளைகள் மறைக்கல்வி கற்பது மிகவும் முக்கியமான ஒன்று என்றும் அதன் மூலம் பிள்ளைகள் வளமான ஒரு எதிர்காலதுக்குள் பிரவேசிப்பார்கள் எனவும் புலம்பெயர் தேசத்திலிருந்து இறை அழைத்தல்கள் வரவேண்டும்” எனவும் ஆன்மபணியாளர் தமது உரையில் சுட்டிக்காட்டினார்.  தொடர்ந்து வேதாகம மறையறிவுப் போட்டியில் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும்  சான்றிதழ்களும்   வெற்றியீட்யவர்களுக்கு பணவெகுமதிகளும்  பிரதம விருந்தினரால் வழங்கப்பட்டது. தொடர்ந்து இனிதான மகிழ்வாக சிறப்பான முறையில் மறைக்கல்வி விழா நடந்தேறியது.  இதை ஒருங்கமைத்து அனைத்தையும் வழிநடத்திய மறையாசிரியர்கள் பாராட்டப்படுவதோடு  மற்றும்  நிகழ்வுகள் நடைபெற ஆன்மீக பணியக நிர்வாகத்தினரும் தங்களின் நேர்த்தியான பங்களிப்பை நல்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தகவல் : அருட்பணி D.E. ரட்ணராஜ் அமதி