நிகழ்வுகள்

இறந்தவர்களை நினைத்து மன்றாடும் நவம்பர் 2ம் நாள் 2023

புலம்பெயர் தேசங்களில் ஒன்றாக விளங்கும் நோர்வே நாட்டின் ஒஸ்லோ பெரும்நகரில் வாழும் கத்தோலிக்க இறைமக்கள் சகல ஆன்மாக்களின் நாளாகிய நவம்பர் 2ம் திகதி தமது உறவுகளை நினைத்து தூய யோவான் ஆலயத்தில் மாலை 7.30 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுத்து மன்றாடினர். திருப்பலியின் ஆரம்பத்தில் ஒவ்வொருவரும் பீடத்துக்கு முன்பாக சென்று இறைவனடி சேர்ந்த உறவுகளை நினைத்து மெழுகுவர்த்தி ஏற்றினர். பின்னர் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. திருப்பலிப்பீடத்தின் அருகே விசேடமாக அலங்கரிக்கப்பட்ட இடத்தில் இறந்தவர்களின் பெயர்கள் அடங்கிய புத்தகம் வைக்கப்பட்டிருந்தது. திருப்பலி முழுவதும் மக்கள் இறந்து இறைவனடி சேர்ந்த எல்லாரின் ஆன்மாக்கள் தமது பாவங்களுக்கு கழுவாயாக மன்னிப்பினை அடைந்து நிலை வாழ்வை அடையவேண்டும் என உருக்கமாக ஜெபித்தனர். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்கள் இன்று தமது உறவுகளை கல்லறைகளில் சந்தித்தித்து அவர்களுக்காக ஜெபித்து அவர்களின் ஆன்மாக்களுக்கு ஈடேற்றம் கேட்பது என்பது இன்றைய நாளில் இடம்பெறும் முக்கியமான ஒரு விடயம் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் :
அருட்பணி D.E. ரட்ணராஜ் அமதி
ஒஸ்லோ